
தமிழகம்
கட்சியிலிருந்து நீக்கியது சட்டப்படி செல்லாது!! – ரவீந்தரநாத் எம்.பி. கடிதம்;;
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் எம்.பி. நீக்கியதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறிப்பாக இபிஎஸ் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் எம்.பி. கட்சியில் இருந்து நீக்கிய தொடர்பாக நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை பதில் மனுஒன்று ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் எம்.பி. நீக்கியதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொடுத்துள்ளார்.
இதனிடையே பொதுக்குழு நடைபெற்றது சட்டவிரோதமானது என கூறி நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து இருப்பதாகவும் கூறினார்.
மேலும், இடைக்கால பொதுசெயலாளர் இபிஎஸ் தன்னை நீக்க சொல்லி கொடுத்த மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
