இல்லம் தேடி கல்வித்திட்டம்: நெறிமுறை மீறி செயல்பட்டதால் பிரசார குழுவிலிருந்து நீக்கம்!

நம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு மாணவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக திட்டமாக அமைந்துள்ளது இல்லம் தேடி கல்வித்திட்டம். ஏனென்றால் தமிழகத்தில் 1.5 ஆண்டுகளாக பள்ளிகள் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதால் இல்லம் தேடி கல்வி திட்டம் மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்கு பிரயோசனமாக அமைந்தது.

இந்நிலையில் இந்த  இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் பிரசார குழு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் சர்மிளா சங்கர் தலைமையிலான பிரசார குழு இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நெறிமுறை மீறி செயல்பட்டதால் இல்லம் தேடி கல்வி பிரசார குழுவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். ஏனென்றால் டாஸ்மாக்கில் மது வாங்கிக்கொண்டு இல்லம் தேடி கல்வித்திட்ட பிரசார வாகனத்தில் சென்ற வீடியோ வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆனது. இதன் விளைவாக திருச்சி சர்மிளா சங்கர் தலைமையிலான பிரசார குழு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment