டுவிட்டரில் டிஸ்லைக் பட்டன்: பயனாளிகள் மகிழ்ச்சி

0aac7b8574ceef3c55290970ff46b7b8-1

டுவிட்டரில் விரைவில் டிஸ்லைக் மட்டன் வரவிருப்பதாகவும் இதனை அடுத்து ட்விட்டர் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர் என்பதும் இந்த சமூக வலைதளம் தங்களுடைய கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு பல்வேறு வசதிகளை அவ்வப்போது செய்து தந்து கொண்டிருக்கின்றது என்பதும் தெரிந்ததே 

அந்த வகையில் தற்போது டிஸ்லைக் பட்டனை அறிமுகம் செய்ய இருப்பதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே லைக்ஸ், ரீட்வீட், ஷேர் மற்றும் கமெண்ட்ஸ் ஆகிய நான்கு பட்டன்கள் இருக்கும் நிலையில் அதில் டிஸ்லைக் பட்டணும் இணைய போகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த டிஸ்லைக் பட்டன் மூலம் ஒருவருடைய டுவிட்டை நாம் விரும்பாவிட்டால் டிஸ்லைக் செய்து கொள்ளலாம் ஆனால் அதே நேரத்தில் எத்தனை பேர் லைக் செய்துள்ளனர் என்பதை பதிவு செய்தவர் மட்டுமே பார்க்க முடியும் என்பதும் மற்றவர்கள் பார்க்க முடியாது என்றும் கூறப்படுகிறது 

முதல் கட்டமாக இந்த வசதியை ஐஓஎஸ் வசதியுள்ள செல்போன்களுக்கு அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து ஆண்ட்ராய்டு செல்போன்கள் இந்த வசதி அளிக்கப்படும் என்றும் டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment