
தமிழகம்
மருத்துவத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம்-அறிவிப்புகள் என்னென்ன?
நம் தமிழகத்தில் தற்போது மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் நம் சட்டப்பேரவையில் மருத்துவத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது.
இதில் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பல்வேறுவிதமான அறிவிப்புகளை கூறினார். அதிலும் குறிப்பாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4308 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.
1021 உதவி மருத்துவர்கள் மற்றும் 3287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு மக்களை தேடி மருத்துவத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த மக்களை தேடி மருத்துவத்தில் அனைவருக்கும் நல வாழ்வு என்னும் இலக்கை அடைய ஆய்வு சேவைகள் அமைக்கப்படும் என்றும் சுப்பிரமணியன் கூறினார். மக்களை தேடி மருத்துவத்தில் ரூபாய் 423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
