Connect with us

மின்வெட்டு மத்தியில் மின்சார துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்.! என்னென்ன எதிர்பார்க்கலாம்?

மின்சாரம்

தமிழகம்

மின்வெட்டு மத்தியில் மின்சார துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்.! என்னென்ன எதிர்பார்க்கலாம்?

மின்வெட்டு மத்தியில் மின்சார துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்.! என்னென்ன எதிர்பார்க்கலாம்?

நம் தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மானிய கோரிக்கைகள் மீது சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன் முதல் கட்டமாக முதலில் நீர்வளத் துறையின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அதன் பின்பு தொடர்ச்சியாக கனிமவளத் துறை, தொழில் துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் மின்சார துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நம் தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இன்றைய தினம் காரசாரமாக விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top