Connect with us

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தீர்ப்புக்கு வரவேற்பு!! வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை!!

stalin new16

தமிழகம்

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தீர்ப்புக்கு வரவேற்பு!! வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை!!

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தீர்ப்புக்கு வரவேற்பு!! வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை!!

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான  ஒன்று கூறியுள்ளது. அதன்படி மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செல்லும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தரவுகளின் அடிப்படையில் கொண்டுவந்த முன்னுரிமை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு தந்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதத்தில் சமூக நீதிப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்த தீர்ப்பு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். உள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு விவகாரம் மாநிலத்தின் சமூகநீதி பிரச்சினையாகும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

இதனால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தேர்தல் வருகிறது என்பதற்காக அவசர கதியில் கொண்டுவந்ததுதான் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்பட காரணம் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். சமூக நீதி நிலைநாட்டப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top