பெற்றோர்களே உஷார்!! இந்தியாவின் பிரபல இருமல் மருந்து(மெய்டன் ஃபார்மா) தயாரிப்பு நிறுத்தம்!!

நம் இந்தியாவில் இருந்து ஏகப்பட்ட நாடுகளுக்கு பல்வேறு விதமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுள் மிகவும் பிரபலமான இருமல் மருந்து பொருள் தான் மெய்டன் பார்மா.

இந்த நிலையில் திடீரென்று இந்தியாவில் இந்த இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது அதன்படி மெய்டன் பார்மா சுட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் இருமல் மருந்து தயாரிப்பு அரியானா அரசு உத்தரவால் உடனடியாக நிறுத்தம் செய்யப்பட்டது.

அரியானாவின் சோனிபட்டில் உள்ள மெய்டன் ஃபார்மாவின் மருந்து தயாரிப்பு ஆலையை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மருந்து தயாரிப்பு நடவடிக்கைகளில் 12 விதிமீறல்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

தயாரிப்பு நடைமுறைகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதால் உற்பத்தியை நிறுத்த சரியான சுகாதாரத்துறை ஆணையிட்டது. மெய்டன் பார்மா சுட்டிகள் நிறுவனம் நான்கு வகையான இருமல் மருந்துகளை கம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.

காம்பியாவில் மெய்டன் பார்முலா இருமல் மருந்துகளை உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குழந்தைகள் மரணம் பற்றி ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் மேடன் இரும்பல் மருந்தே காரணம் என அறிவித்தது.

உலக சுகாதார நிறுவன அறிக்கையை அடுத்து மெய்டன் நிறுவனம் மருந்து தயாரிப்பு ஆலையில் அரியானா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment