நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுகிறதா? அப்படி எடுத்தா குழாய்கள் துண்டிப்பு!!

இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது மழை நீரானது வெள்ளம் போலப் புரண்டு ஓடுகிறது. இதன் மத்தியில் தற்போது உயர் நீதிமன்றம் தண்ணீர் திருடுபவர்காண பல்வேறு உத்தரவினை பிறப்பித்துள்ளது.உயர்நீதிமன்றம்

அதோடு மட்டுமில்லாமல் நீர்ப் பகிர்வு கொள்கையை உருவாக்க உத்தரவிட்டுள்ளது.  ஆறு, கால்வாய்களில் தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு பகுதியிலுள்ள பவானி ஆறு மற்றும் காலிங்கராயன் கால்வாயில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும் தங்களது பதிலை கூறி உள்ளது.

நாங்கள் சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படுகிறதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்வதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு சட்டவிரோதமாக நீர் எடுக்க பட்டால் உடனடியாக குழாயை அகற்றி, மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

அதற்கு தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்து அளிப்பதற்கான கொள்கையை உடனடியாக வகுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆதாரமாக உள்ள நீரை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment