சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜனவரி 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது ஈஸ்வரன். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது
பெரும்பாலான திரையரங்குகளில் இந்தப் படம் தூக்கப்பட்டு விட்டதாகவும் இந்த படத்திற்காக செலவு செய்த தொகையை கூட வசூலாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தை அடுத்து சிம்பு மற்றும் சுசீந்திரன் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் ஈஸ்வரன் தோல்வி அடைந்ததை அடுத்து அந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் செய்து விட்டதாகவும் இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் சிம்புவை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் காத்து இருக்கின்றார்கள் என்பதும், சிம்புவுக்கு தொடர்ச்சியாக புதிய படங்கள் புக் ஆகிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது