ஜெய்பீம் விவகாரம்: சந்தானம்-சத்யராஜ் இடையே கருத்து வேறுபாடு!

நவம்பர் 2ஆம் தேதி அமேசன் பிரைம் என்ற இணையதளத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம், வெளியான முதல் தற்போது வரை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று காணப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஜெய் பீம்

ஜெய்பீம் படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாக காணப்படுகிறது. இதற்கு வன்னியர் சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு பல்வேறு கேள்விகளை கேட்டு இருந்தார்.

சந்தானம்

அவருக்கு நேற்றைய தினம் பிரபல இயக்குனர் பாரதிராஜா கடிதம் ஒன்று எழுதி இருந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர்குள்ளேயே இத்திரைப்படம் முரண்பாடு ஏற்படுத்தியுள்ள காணப்படுகிறது.

அதன்படி நடிகர் சத்யராஜ் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அதன்படி சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் ஒரு நடிகருக்கு பிரச்சினைகள் வரத்தான் செய்யும், அதற்கு கலைஞர்கள்தான் அந்த நடிகருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு நடிகர் சந்தானம் பதில் கருத்து கூறியிருந்தார். அதன்படி தங்களது கருத்தை உயர்வாக பேசுபவர்கள் மற்றவர்களை எக்காரணம் கொண்டும் தாழ்வாக பேச வேண்டாம் என்றும் கூறி இருந்தார் அது நமக்குத் தேவையில்லை என்றும் நடிகர் சந்தானம் கூறியிருந்தார்.

இரண்டு மணி நேரம் திரைப்படம் பார்க்கும் மக்கள் இருட்டில் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் மத்தியில் இவ்வாறு ஒருவரை உயர்த்தி மற்றவர்களை தாழ்வாக கூறுவது தேவையில்லாதது என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment