திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடா? சின்னத்திரை ஜோடிக்கு ஏற்பட்ட பிரச்சனை……

இந்த மாதம் திருமண மாதம் என்பது போல சமீபத்தில் வரிசையாக அடுத்தடுத்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் காதல் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் கடந்த மாதம் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டவர்கள் தான் சின்னத்திரை நடிகர்கள் ஆர்யன் – ஷபானா தம்பதிகள்.

ஆர்யன் - ஷபானா

இந்நிலையில் திருமணமாகி ஒரு மாதம் கூட முடியவில்லை அதற்குள் சமீபத்தில் ஷபானா இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதில், “நாம் எல்லோருமே சில வலிகளை அனுவித்து தான் வந்திருப்போம். பலருக்கும் பலவிதமான பிரச்னை இருக்கும். சிலர் பிரியமான ஒருத்தரை இழந்திருக்கலாம்” என கூறியிருந்தார்.

இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். என்ன நடந்தது என ஷபானாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் விசாரித்த போது, ஆர்யன் வீட்டில் இவர்கள் திருமணத்தை ஏற்கவில்லையாம். திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் ஷபானா இன்னும் ஆர்யன் வீட்டிற்கு செல்லவே இல்லையாம்.

அதுமட்டுமல்ல ஆர்யன் வீட்டில் இருந்து ஷபானாவை தொடர்பு கொண்ட சிலர், “நாங்கள் ஆர்யனுக்கு வேறு பெண்ணை பார்த்து விட்டோம். நீயாக அவனை விட்டு விலகி விடு” என மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திருமணத்திற்கு முக்கிய காணமாக இருந்த ஷபானாவின் தோழியும் நடிகையுமான ரேஷ்மாவிடமும் ஆர்யன் வீட்டார் சண்டை போட்டுள்ளார்களாம்.

இந்த பிரச்சனை காரணமாக ஆர்யன் ஷபானா தம்பதி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடும், மனக்கசப்பும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில் இந்த இளம் தம்பதிகள் இடையே ஏற்பட்ட பிரச்சனை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment