
செய்திகள்
தமிழக முதல்வரை இயக்கம் இயக்குநர் விக்னேஷ் சிவன்!
தமிழத்தில் இந்த மாத இறுதியில் மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. வருகிற ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை, 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதும், 186 நாடுகளைச் சார்ந்த 2500 செஸ் விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கான வேலைகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் செஸ் ஒலிபியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
அதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம் பெறுவது போன்ற காட்சிகள் அமைய உள்ளது. அந்த படப்பிப்பில் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்று சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த விளம்பர திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார்.நேப்பியர் பாலத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால் சில மணி நேரங்கள் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
’பொன்னியின் செல்வன்’ தமிழ் டீசர் – வெளியிடும் முன்னணி நடிகர் யாரு தெரியுமா?
மகாபலிபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெற உள்ளது. சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில், இந்த நிகழ்வின் விளம்பர படத்தில் விக்கி இயக்கத்தில் முதல்வர் முக ஸ்டாலின் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.
