இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் ஹாட் ஸ்பாட்… என்ன ஸ்பெஷல்…

விக்னேஷ் கார்த்திக், நடிகர், வீடியோ அண்ட் ரேடியோ ஜாக்கி, திரைக்கதை எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் பல குறும்படங்களில் நடித்தும் இயக்கியும் உள்ளார். சின்னத்திரையில் தொலைக்காட்சிகளான விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களில் தொகுப்பாளராக மற்றும் நடிகராக நடித்தவர். ‘யுவர்ஸ் சேம்புல்லி’ என்ற குறும்படத்தை இயக்கியதன் மூலம் அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி. பிரகாஷ், கவுரி கிஷன், வெங்கட் பிரபு மற்றும் பலர் நடித்த ‘அடியே’ திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. அல்டெர்னேட் ரியாலிட்டி, டைம் ட்ராவல், மல்டிவெர்ஸ், டைம் லூப் ஆகிய புது கருத்தாக்கங்களை வைத்து நாயகனின் ஒருதலைக் காதலை புதிய முறையில் காண்பித்திருக்கிறார். முக்கியமாக இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘வா செந்தாழினி’ என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்ததாக இயக்கிய படம் தான் ‘ஹாட் ஸ்பாட்’. இந்த படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், சுபாஷ் செல்வம், ஜனனி ஐயர், சோபியா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கூறுகையில், இது ஒரு ஹைப்பர் லிங்க் படமாக இருக்கும். நான்கு தனிப்பட்ட கதைகளை ஒன்றிணைத்து உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு கதையும் தனிப்பட்ட தன்மையை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

கே. ஜே. பி மற்றும் 7 வாரியர் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சதிஷ் ரகுநாதன் மற்றும் வான் இப்படத்திற்கு இசையமைப்பும், கோகுல் பினாய் ஒளிப்பதிவும் செய்துள்ளனர். வருகிற மார்ச் 29 ஆம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...