முதல் படத்திலேயே இவ்வளவு பிரச்சனையா? பொல்லாதவனில் பொல்லாதவனாக மாறிய வெற்றி

பாலு மகேந்திரா பட்டை தீட்டிய எண்ணற்ற வைரங்களில் இன்றும் பிரகாசம் குறையாமல் ஜொலித்து இன்னும் புதுப்புது படைப்புகளை வழங்கி வருபவர்தான் வெற்றி மாறன். கடலூரைச் சேர்ந்த வெற்றி மாறன் எழுத்து, சினிமா மீது மோகம் கொண்டு பாலுமகேந்திராவிடம் உதவியாளராகச் சேர்ந்து திரைப்படக் கலையைக் கற்றார். இன்று  இதுத்ன் வெற்றி மாறன் படங்கள் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவிற்கு ஆடுகளம், அசுரன், விசாரணை, வடசென்னை என முத்தான படங்களை அளித்தவர்.  பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ்-பிரியாமணி நடித்த அது ஒரு கனாக்காலம் படத்தில் இருந்தே இருவருக்கும் சிறந்த நட்பு உண்டானதாம்.

ஆனால் இவரின் முதல் படமான பொல்லாதவன் படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து வெளிவந்திருக்கிறது. இப்படம் குறித்து வெற்றி மாறன் தனது புத்தமாகன மைல்ஸ் டூ கோ பதிவு செய்திருகிறார். அதாவது வெற்றிமாறன், பொல்லாதவன் கதையை தனுஷிடம் சொல்லி முடித்தவுடன், தனுஷ் வெற்றிமாறனை 10 தயாரிப்பாளர்களுக்கு மேல் கதை சொல்ல அனுப்பி வைத்திருக்கிறார்.  ஏதோ ஒரு வகையில் அந்த ப்ராஜெக்ட் ஒரு சில வருடங்களாக தள்ளித்தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.. நாட்கள் செல்ல செல்ல, தனுஷுக்கும் வெற்றிமாறனுக்குமே ஒரு அவநம்பிக்கை ஏற்படுகிறது..

ஒரு கட்டத்தில் வெற்றிமாறன், தனுஷிற்கு ஃபோன் செய்தால் ஃபுல் ரிங் போகிறது.. தனுஷ் எடுக்கவே இல்லை.. திரும்பவும் கூப்பிடவில்லை.. வெற்றிமாறனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேறு ப்ராஜெக்ட்களில் ஈடுபடலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு, ஒரு சில மாதங்கள் வேறு ஏதேதோ வேலைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.. அப்பொழுதுதான் தனுஷிடமிருந்து ஒரு கால்.. வேறொரு ப்ரொடியூஸரை பார்க்கலாம் என்று..

தேவா போட்ட டைட்டில் தீம் மியூசிக்கை விரும்பாத ரஜினி.. ஆனால் இன்று வரை தொடரும் ரகசியம் இதான்..

இந்நிலையில் தயாரிப்பாளர் கிடைத்து ஷூட்டிங் ஆரம்பிக்கிறது.. ஹீரோயின் திவ்யாவை வைத்து 15 நாட்கள் ஷூட்டிங் முடித்தவுடன், வெற்றிமாறனுக்கும் திவ்யாவிற்கும் ஏதோ ஒரு சண்டை வர, “இனிமேல் இந்த படத்தில் நடிக்க மாட்டேன்” என்று கோபித்துக் கொண்டு திவ்யா வெளியே போய் விடுகிறார்.

வட சென்னையில் வில்லன் வீடு இருப்பதாக வெற்றிமாறன் காட்டியிருப்பார். இந்த இடத்தில் எப்படி ஒரு வில்லன் இருப்பான்? என்று தயாரிப்பாளர் நண்பர்கள் சிலர் பிரச்சினை செய்ய, அன்றைய நாள் ஷூட்டிங்கே நடைபெறாமல் கேன்சல் ஆகி இருக்கிறது..

இந்த படத்தில் காமெடியே இல்லை. காமெடி கொஞ்சம் வைத்தால்தான் எடுபடும் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்ல, வெற்றிமாறன் எழுத்தில் இல்லாமல், முழு காமெடி போர்ஷனையும் கதைக்குள் கொண்டு வந்தது சந்தானம்தான்..

இது எல்லாவற்றையும் விட உச்சமாக, “இந்த படத்திற்கு ஏதாவது மாஸாக டைட்டில் வைக்கலாம்” என்று தம்பிக்கு எந்த ஊரு போன்ற தலைப்பை வெற்றிமாறனிடம் தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார்.. அப்படி பேர் வைக்கிறதுக்கு ‘பொல்லாதவன்’னே பேர் வைக்கலாம் என்று நக்கலாக வெற்றிமாறன் சொல்ல, ப்ரொடியூஸருக்கும், தனுஷுக்கும் இந்த பெயர் மிகவும் பிடித்து விட்டது.. அவர்கள் அந்த தலைப்புதான் வேண்டும் என்று சொல்கிறார்கள்.. வெற்றிமாறன் மிகுந்த கோபத்தில், “கதைக்கு சம்மந்தமே இல்லாமல் இப்படி ஒரு தலைப்பை இந்த படத்திற்கு வைக்க முடியாது என்று வம்படியாக நிற்கிறார்.. எனக்கு விருப்பமே இல்லாத டைட்டிலுடன்தான் என் படம் வெளியானது என்று வருத்தப்பட்டிருக்கிறார் வெற்றிமாறன்..

இப்படி பல இடியாப்பச்சிக்கல்களுடன் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம்தான் “பொல்லாதவன்”.. எத்தனை வலிகளைத் தாங்க முடியுமோ, அத்தனையும் தாங்கித்தான் இந்த படத்தை ஆரம்பித்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் இன்று பெயருக்கு ஏற்றாற் போல வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews