தனது முதல் படத்திலேயே கமலுடன் போட்டி போட்ட விஜய் சேதுபதி..பின்னாளில் அவருக்கே வில்லனாக நடித்த வரலாறு

தமிழ் சினிமாவில் மண் மணம் சார்ந்த கதைகளையும், மென்மையான உணர்வுப் பூர்வமான கதைகளை எடுத்து ஹிட்கொடுக்கும் இயக்குநர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சீனு ராமசாமி. தனது  முதல் படமான கூடல் நகரில் சுமாரான வெற்றியைக் கொடுத்தவர். 2010-ல் வெளியான தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் கவனிக்க வைத்தார்.

சிறந்த பாடல், சிறந்த துணை நடிகை, சிறந்த படம் என மூன்று பிரிவுகளிலுமே தேசிய விருதினைப் பெற்ற இப்படத்தில் தான் விஜய்சேதுபதி முதன்முதலாகக் கதாநாயகனாக நடித்திருந்தார். விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்ற இப்படம் முதலில் தியேட்டர்களில் காற்று வாங்கியது.

பின்னர் அடுத்தடுத்து வந்த நல்ல விமர்சனங்களால் மக்கள் திரையரங்கு நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். விஜய் சேதுபதியை கதாநாயகனாக ஏற்றுக் கொண்டு படத்தினை ரசிகர்கள் வெற்றிப் படமாக்கினர்.

அட்லியுடன் கமல் எடுத்த போட்டோவுக்குப் பின்னால இவ்ளோ விஷயம் இருக்கா?

இந்த படத்தின் ரிலீசின் போது வந்த படம் தான் கமல்ஹாசனின் மன்மதன் அம்பு. இயக்குநர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் உதயம் தியேட்டர் வாசலில் படம் வெளியான சில நாட்களுக்கு தினமும் போவார்களாம். ஏனெனில் அப்போது மன்மதன் அம்பு படமும் வெளியாகி இருந்தால் தங்கள் படத்திற்கு எப்படி வரவேற்பு இருக்கும் எனப் பார்ப்பதற்காக தியேட்டர்களில் சென்று பார்த்திருக்கிறார்கள்.

அப்போது தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கமல்ஹாசன் போஸ்டர் மற்றும் விஜய் சேதுபதியின் போஸ்டர் ஆகிய இரண்டையும் கவனித்து ஓரிருவர் தென்மேற்குப் பருவக் காற்று படத்திற்குச் செல்ல விஜய் சேதுபதிக்கும், சீனு ராமசாமிக்கும் நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அதன்பின் அந்தப் படம் விமர்சகர்களால் கொண்டாடப் பட்டு வெற்றி அடைந்தது. விஜய் சேதுபதி என்னும் கதாநாயகன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார். எல்லாவற்றையும் விட உச்சமாக எந்த நடிகரின் படத்திற்கு இணையாக தனது படமும் வந்து அவர்களை பயமுறுத்தியதோ அதே கமல்ஹாசனுக்கு வில்லனாக விக்ரம் படத்தில் நடித்தன் மூலமாக சினிமாவில் விஜய் சேதுபதி எவ்வளவு உயரத்தை அடைந்திருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளலாம்.

வழக்கமாக சீனுராமசாமி தனது ஒவ்வொரு படத்தின் ஸ்கிரிப்டையும் ராமவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் இல்லத்தில் ஆசிபெற்று பின்னர் எடுப்பது வழக்கம். ஆனால் மாமனிதன் படத்தின் ஸ்கிரிப்டை சிவாஜியின் இல்லம் அருகே உள்ள கோவிலில் வைத்து பூஜித்து பின்னர் இயக்கியிருந்தாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...