அசிஸ்டண்ட் டைரக்டரை பார்த்துப் பார்த்துக் கவனித்த கேப்டன்.. அதுக்கு அவரு செய்த கைமாறு தான் ஹைலைட்

நடிகர் விஜயகாந்த் பற்றிய தனது திரையுலகம் மற்றும் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இப்படி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்.

ஆபாவாணனின் ஊமைவிழிகள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். உழவன் மகன் டிஸ்கஷன் மதுரையில் ஒரு ஓட்டலில் நடந்தது. எங்களை எல்லாம் ரூமில் தங்க வைத்துவிட்டு அவரே ஆளை அனுப்பி சாப்பாடு வாங்கி வந்து எங்களுக்கு ஊட்டி விடுவார்.

‘டேய் இதை சாப்பிடு. இது வந்து நல்லி தோசை. (எலும்பெல்லாம் போட்டு மதுரை கோனார் மெஸ்ல நல்லி தோசை போடுவாங்க.) இதை சாப்பிடு உதயா. உடம்பு நல்லா வரும். என்னைப் பாரு’ன்னு உற்சாகம் தருவார்.

R.V.Uthayakumar
R.V.Uthayakumar

ராத்திரி எல்லாம் டிஸ்கஷன் பண்ணிட்டு நான் படுத்துத் தூங்கிடுவேன். கொஞ்ச நேரம் கழிச்சிப் பார்த்தா என் பக்கத்துல இவரு படுத்துத் தூங்கிக்கிட்டு இருப்பாரு. ஒரு உதவி இயக்குனர்னு பார்க்க மாட்டாராம். ஆபீஸ் பாய்னு கூட பார்க்காம எல்லோரையும் ஒன்றாகப் பார்க்கும் குணம் படைத்தவர் கேப்டன் விஜயகாந்த் என்று இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல் தனது கல்யாணத்தின் போது வந்த சிக்கலையும் அதை விஜயகாந்த் எப்படி தீர்த்து வைத்தார் என்பதையும் அவரே இப்படி சொல்கிறார். நான் முதல் படம் அவரை வச்சி பண்ணல. பிலிம் இன்ஸ்டிட்யூட் யூனியன் கூடவே பண்ணினதனால முதல் படம் பிரபு சார் கூட பண்ணினேன். ரிலீஸ் ஆனதும் தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன். அப்போ கல்யாண தேதியும் வச்சாச்சு. ஆனா சென்சார்ல படம் ரிலீஸ் ஆக லேட்டாச்சு.

கையில காசே கிடையாது. வெறும் 2500 ரூவா பாக்கெட்ல போட்டுட்டு கல்யாணம் பண்ண ஊருக்குப் போயிக்கிட்டு இருக்கேன். எங்கடா உதய் கல்யாணம். இன்வட்டேஷன் கூட கொடுக்கல. உன் பிரண்டு கொண்டு வந்து கொடுக்கறான்னு சொன்னாரு. இன்வட்டேஷன் கொடுக்கறதுக்குக் கூட டென்ஷன். சென்சார் சர்டிபிகேட் 17ம் தேதி வாங்கறேன். 20ம் தேதி வீட்ல சாமி கும்பிடணும். 21ம் தேதி பண்ணைபுரத்துல கல்யாணம்.

CK
CK

நான் விஜயகாந்த் சாரைப் பார்த்து இன்வைட்டே பண்ணல. நம்ம உதய் கையில காசு இல்லாம ஊருக்குப் போறானே. என் கார்ல உறவினர்களை எல்லாம் அனுப்பி வைக்கிறேன்னு பண்ணைபுரத்துக்கு அனுப்பி வைச்சாரு கேப்டன்.

24ம் தேதி ரிசப்ஷன். 26ம் தேதி ரிலீஸ். அதுக்கு அப்புறம் தான் என்னோட தலையெழுத்தே தெரியப்போகுது. 24ம் தேதி ரிசப்ஷன்ல முதல் சீட்ல கேப்டன் வந்து உட்கார்ந்துட்டாரு. ஒரு அசிஸ்டண்ட் டைரக்டர் நல்லா இருக்கணும்னு நினைச்ச உலகத்துலயே முதல் நபர் விஜயகாந்த் தான்.

அதனால தான் அவரை ‘இமயத்துல தூக்கி வச்சிக் கொண்டாடுற மாதிரி ஒரு படம் பண்ணனும்’னு சின்னக் கவுண்டர் படத்தை எடுத்தேன். தோள்ல துண்டைத் தூக்கிப் போட்டா வருமே அதுதான் கதைன்னு சொன்னேன். விஜயகாந்த் சார் கதை கேட்கல. உதய் பண்ணுவான்டா.

கிழக்குவாசல் மாதிரி சூப்பரா பண்ணுவான்னு விஜயகாந்த் சொல்லிட்டாரு. கதையே கேட்காம நடிச்சாரு. அவருக்கிட்ட நான் கிராண்டியர் படம் எல்லாம் பண்ண மாட்டேன். எமோஷனல் கிராண்டியர் தான் பண்ணுவேன்னு சொன்னேன். அப்படின்னு ஒண்ணு இருக்கான்னு கேட்டாரு. ராவுத்தர் கிட்ட மட்டும் தான் கதையை சொன்னேன். அவரு தான் என் தலையெழுத்தையே மாற்றினாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1992ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான படம் தான் சின்னக்கவுண்டர். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. விஜயகாந்த்தின் திரையுலகப் பயணத்தில் இது ஒரு மைல் கல்லாகவே அமைந்தது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...