வாவ்! பல்லவி அனு பல்லவி தொடங்கி இன்று பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு தாண்டி தலைமுறை கடந்த இயக்குனர் மணிரத்னம்!!!

திரையுலகிற்கு பல்லவி அனு பல்லவி என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி மௌன ராகம், நாயகன், அஞ்சலி, இருவர், ரோஜா, தளபதி , காற்று வெளியிடை , ஓகே கண்மணி, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன் என பல காவிய படைப்புகளை தந்தவர் இயக்குனர் மணிரத்தினம்.

பல உச்ச நட்சத்திரங்களும்  இவருடைய படத்தில் ஒரு முறையாவது நடித்து விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு உச்சம் தொட்ட இயக்குனர் இவர்.

வசனங்கள் அதிகம் பேசாவிட்டாலும் இவருடைய காட்சிகளை பேச வைக்கும் காட்சி காதலர் இவர்.

இன்று இவருடைய பிறந்தநாள். இவருடைய பிறந்தநாளுக்கு பல்வேறு பிரபலங்களும், தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

கமலஹாசன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்

ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள மகிழ்ச்சியை வைத்து வாழ்க்கையை கணக்கிட்டால், உங்களை சுற்றியுள்ள நண்பர்களை வைத்து உங்களுடைய வயதை கணக்கிட்டால் என் அன்பான மணிரத்தினம் நீங்கள் மிகவும் வயதான மனிதராகிப் போவீர்கள். தனது கலையின் மூலம் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை தொட்ட இந்திய சினிமாவின் ஒரு நாயகன் மற்றும் உரையாடல்களை அழகான காட்சி அனுபவமாக மாற்றியவர்.

தொடர்ந்து கற்றுக் கொள்வதன் மூலம் சவாலின் அளவை கவனிக்காமல் சினிமாவின் எல்லைகளைத் தொடர்ந்து தள்ளிவிட்டீர்கள். இன்று நீங்கள் அடுத்த தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் ஒரு மாஸ்டர், அவர்கள் மூலம் உங்கள் பாரம்பரியம் என்றென்றும் எதிரொலிக்கும். நாயகன் முதல் #KH234 வரையிலான எங்கள் பயணம் தனிப்பட்ட முறையில் எனக்கு வெகுமதியாகவும், வளமாகவும் இருந்தது. இந்த நாளின் பல மகிழ்ச்சியான வருவாய்கள் மேலும் வரவுள்ளன நண்பரே!

#பிறந்தநாள் வாழ்த்துக்கள் மணிரத்னம்

என்று தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews