இன்றைய சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆஸ்தான டைரக்டர் என்றால் அது கண்டிப்பா லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம்,கைதி ,விஜய் நடித்த மாஸ்டர்,கமல் வைத்து விக்ரம் என வெற்றிகரமான படத்தை இயக்கினார். ஆனால் அது சாதாரண விஷயம் இல்லை. அந்த அளவுக்கு பின்னாடி நிறைய வலிகளும் கஷ்டங்களும் அவர் கடந்து வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முதல் 4 படங்களிலேயே அனைவராலும் கவரப்பட்டு உச்சத்தை தொட்ட இயக்குனர் இவர் தான், மேலும் அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67வது படத்தில் நடிக்கப்போவதாக உறுதியான தகவல் வந்துள்ளது. தளபதி 67 படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக எடுக்கப்படயுள்ளதாக கருத்துக்கள் வந்துள்ளது.
அதை தொடர்ந்து இவர் விக்ரம் 2,கைதி 2 என பட படங்களை தன வசம் கொண்டுள்ளார்.இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தனது அடுத்த ஸ்கிரிப்டை ராம்சரணை அழைத்து கதையை சொல்ல தேதி கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கோவை மாநகர காவல்துறை மற்றும் டெக்ஸிட்டி யுவா இந்தியா என்ற அமைப்பினர் குறும்பட போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்கள். அதில் ‘போதை தடுப்பு விழிப்புணர்வு’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .அதற்கு மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரையிலான குறும்படத்தை எடுத்து அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தகவல் வந்துள்ளது
தனுஷின் நானே வருவேன்’ கதைகளம் இதுவா ? இரட்டை வேடங்களில் கலக்கும் தனுஷ் !
இந்த போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கு பெறலாம் எனவும், வெற்றி பெறுவோருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
கோவையை சார்ந்த சினிமா ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி தனது திறமையை வெளிகாட்டிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.