மாநாடு,கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர் லோகேஷ்,சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் 400 கோடி வசூல் சாதனை படைத்துவருகிறது.அதை தொடர்ந்து இவர் விக்ரம் 2,கைதி 2 என பட படங்களை தன வசம் கொண்டுள்ளார்.
இதற்கு இடையில் இவர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து விஜய் 67 படத்தை இயக்கயுள்ளார்.இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தனது அடுத்த ஸ்கிரிப்டை பிரபாஸ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை அணுகி இறுதியாக அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளார்.
புஷ்பா நடிகர் தனது ‘புஷ்பா 2’ முடிந்ததும் அவருடன் பணியாற்றுவார் என்றும் திறமையான கோலிவுட் இயக்குனருடன் இணைந்து பணியாற்றுவார் என கூறப்படுகிறது.ஒரு பிரபலமான தமிழ் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை ஒரு பான்-இந்திய திரைப்படமாக தயாரிக்கும் எனவும் மேலும் சிலரும் படத்திற்கு நிதியளிக்கும் திட்டத்தில் பங்குதாரர்களாக சேர ஆர்வமாக உள்ளனர் என தகவல் வந்துள்ளது.
லோகேஷ் சமீபத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். மேலும் ‘ஆர்ஆர்ஆர்’ நடிகர் ராம் சரண் லோகேஷுக்கு ஒரு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.
சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயின் இவரா? அப்போ படம் வேற லெவல் தான்!
மேலும் இந்த படம் விக்ரம் 2 வாக இருக்க வாய்ப்பதாக கூறப்படுகிறது,விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு பொதுவாகவே முன்னணி ஹீரோக்கள் இவருடன் இணைந்து படம் நடிக்க ஆர்வமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.