சர்ச்சையைக் கிளப்பிய விஜய் பேசிய கெட்ட வார்த்தை… எதுக்குன்னு தெரியுமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொல்கிறார்…

தற்போது தமிழ்த்திரை உலகில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே ரொம்பவே எதிர்பார்ப்பில் உள்ள படம் லியோ. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தை குறித்து நிறையவே சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

5 வருஷத்துக்கு முன்னாடி எழுதுன கதை தான் லியோ. மல்டி ஸ்டார் படம்கறது நான் பர்ஸ்ட் படத்துல இருந்தே தான் பண்றேன். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்னு எல்லாமே மல்டி ஸ்டார் தான். அதனால எனக்கு இது பெரிய ஒர்க்கா தெரில. பாலிவுட்ல எல்லாம் பல படங்கள் மல்டி ஸ்டார் படம் தான்.

Vijay get up
Vijay get up

முன்னாடி ஊமை விழிகள், இணைந்த கைகள் மல்டி ஸ்டார் படங்களாக வந்தன. இப்போது மறுபடியும் தமிழ்ப்பட உலகில் மல்டி ஸ்டார் படங்கள் வந்த வண்ணம் உள்ளன. லயனோட ஒரு பேருன்றதால ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா வந்த பேரு தான் லியோ.

விஜய், திரிஷா கில்லி படத்துல ஹிட் காம்போ. அதனாலயும் இந்தப் படத்துக்கு ரொம்ப எதிர்பார்ப்பு. இதுல கப்பிளா பார்க்கறதுக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கணும்கறதுக்காக த்ரிஷா மேடத்தை நடிக்க வச்சோம்.

சஞ்சய்தத் சாரோட நான் ஒர்க் பண்றப்போ அவர் மேல இருந்த ஒரு பிம்பம் உடைஞ்சிட்டு. அவரை மாதிரி ஸ்வீட்டான ஆளு கிடையாது. அவரு தமிழ்ல பேசி நடிச்சதுல்ல. அதுக்காக தினமும் டியூஷன் மாதிரி ஆரம்பிப்போம். சாயங்காலம் உட்கார்ந்து அவருக்கு தமிழ்ல பேசச் சொல்லி ரெக்கார்டு பண்ணுவோம்.

ஒரு வாரத்துக்குள்ளேயே அவரு என்னை பையன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாரு. ப்ளடி சுவீட் அந்த நேரத்துல வந்த டயலாக். கதைக்கு மேட்ச்சா இருக்குறதனால அந்த வசனம் யோசிக்கும் போது வந்தது.

Leo1 1
Leo1

ஆக்ஷன் கிங் அர்ஜூன் ஹரால்டு தாஸ் என்ற பெயரில் வந்து மிரட்டி இருக்கிறார். 170 படங்களில் 900 ஃபைட் பண்ணியிருக்காரு. இதுக்கு மேல நாம அவருக்கு ஸ்டண்ட் பத்தி சொல்லத் தேவையில்லை. அவரு நடிச்சதுல ஜென்டில் மேன், முதல்வன் படம் எனக்குப் பிடிச்சது.

விக்ரம் படத்துல ப்ரியா ஆனந்த் மிஸ் ஆகிட்டாங்க. அப்புறம் கௌதம் வாசுதேவ் மேனன் சாருக்கு ஜோடி தேவைப்பட்டது. அதுக்காக பிரியா ஆனந்த் கதைப்படி மேட்சா இருந்தாங்க. நம்ம ஸ்ட்ரென்தே வந்து கேரக்டருக்கு யாரு மேட்ச்சா இருப்பாங்களோ அவங்கள செலக்ட் பண்ணி வச்சாலே போதும். பாதி வேலை முடிஞ்சிரும்.

1000 பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆடியிருக்காங்கன்னா அவங்களால சண்டை போட முடியும். விக்ரம் படத்துல சாண்டி மாஸ்டர் போட்டுருந்தோம். அவருக்குள்ள சரியான ஆக்டர் இருக்குறாங்கங்கறத விக்ரம் படத்துலயே சொன்னேன். அதனால அடுத்த படத்துல நாம பார்க்கலாம்னு சொன்னேன். அப்படித் தான் சீரியல் கில்லரா சாண்டி மாஸ்டர் வந்து மிரட்டியிருப்பாங்க.

Leo 3
Leo 3

எல்லாருக்குமே ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதுல சாண்டி ரொம்ப நோட்டபிளா தெரிவாரு. ஹயனாவோட சண்டை பயங்கர புதுசா இருக்கும். தியேட்டர்ல அந்த 10 நிமிஷம் ரொம்ப பயங்கரமா இருக்கும். கழுதைப்புலி தான் அது. ரொம்ப பில்டப்பா இருக்கும்.

Leo 2 1
Leo 2

அந்தக் கதைக்கு அந்த வார்த்தைத் தேவைப்பட்டுது. கோபத்துல நாம எமோஷனலா நம்மை அறியாமலேயே பேசுறது தான். அன்னைக்குக் காலைல விஜய் சார் எங்கிட்ட கேட்டாரு. அது கரெக்டா இருக்குமான்னு கேட்டாரு. அவரை கன்வின்ஸ் பண்ணித் தான் பேச வச்சேன். அவரு கத்துறதுக்கும், அதுக்குப் பின்னாடி வர்ற சீனுக்கும் இடையில இது தேவைப்பட்டுது. அதனால தான் அந்த சீன்ல அவரு கெட்ட வார்த்தைப் பேசுறத டிரெய்லர்ல வச்சோம்.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews