இயக்குநருக்கே பிடிக்காத கிளைமேக்ஸ் காட்சி.. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா?

ஒரு திரைப்படம் எடுத்து முடித்த பின் அந்தத் வெளியாகி வெற்றி, தோல்வி அடையும் போது இயக்குநருக்கு பாராட்டுக்களும், எதிர்மறையான விமர்சனங்களும் அடுத்தடுத்து கிடைக்கும். அப்படி ஒரு படத்திற்குத் தான் இப்படி போய் கிளைமேக்ஸ் வச்சுட்டாங்களே என்று உச் கொட்ட வைத்தது. அந்தப் படம் தான் பீமா.

விக்ரம், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த பீமா திரைப்படம் கடந்த 2008-ல் வெளியானது. சண்டக்கோழி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு லிங்குசாமியின் அடுத்த படமாக பெரிதும் பீமா படம் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. படம் வெளியானவுடன் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது காரணம் பீமா படத்தின் கிளைமேக்ஸ்.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதையில் நகர்ந்து இறுதிக் காட்சியில் ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட அனைவரும் வரிசையாக மாற்றி மாற்றி சுட்டுக் கொண்டு இறந்து விடுவர். இந்தக் காட்சி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்போது எதிர்மறையான விமர்சனங்களை பீமா படம் சந்தித்து. மேலும் இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இப்பொழுது அதிருப்தியைத் தருவதாக பேட்டி ஒன்றி குறிப்பிட்டுள்ளார். அவர் எடுத்திருந்த இந்த கிளைமேக்ஸ் அவருக்கே பிடிக்காமல் போயிருக்கிறது.

அந்தக் காலத்து ஜெயிலராக மிரட்டிய எம்.ஜி.ஆர்..முத்துவேல் பாண்டியனுக்கு முன்னரே வந்த பல்லாண்டு வாழ்க..

பீமா படத்தின் கதையில் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இந்தி நடிகர் நானாபடேகர் ஆவார். இயக்குநர் லிங்குசாமி மற்றும் விக்ரம் ஆகிய இருவருமே இணைந்து இக்கதையை நானாபடேகரிடம் கூறியிருக்கின்றனர்.

நானாபடேகரும் கிளைமேக்ஸ் காட்சியில் திருப்தி இல்லாது அவர் ஒரு கிளைமேக்ஸ் சொல்லியிருக்கிறார். அதாவது விக்ரம் ஜெயிலில் இருந்து வெளிவரும் போது அவரைச் சந்திக்க வரும் பிரகாஷ்ராஜ் அவரை வழியனுப்பி விட்டு திரும்பும் போது அவரை மட்டும் எதிரிகள் சுட்டுக் கொல்வது போல் அமைக்கலாம் என யோசனை கூறியிருக்கிறார்.

ஆனால் லிங்குசாமி அதனை ஏற்காது தனது இஷ்டப்படி கிளைமேக்ஸை வைக்க அது ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போனது. எனினும் படத்தில் இடம்பெற்ற ஆக்சன் காட்சிகள் மற்றும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களைக்  கவர்ந்து. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் இன்றும் மெலடியாக வருடுகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...