Connect with us

#BREAKING பிரபல இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை…கோலிவுட்டில் பரபரப்பு… !

lingusamy 759

செய்திகள்

#BREAKING பிரபல இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை…கோலிவுட்டில் பரபரப்பு… !

பிவிபி கேப்பிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து இயக்குனர் லிங்குசாமி வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தாததையடுத்து, நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு.

கடந்த 2014ம் ஆண்டு கார்த்தி, சமந்தா நடிப்பில் “எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய கடனை திரும்பித் தரமால் இயக்குநர் லிங்குசாமி ஏமாற்றியதாக அந்நிறுவனம் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திடம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் அடுத்தடுத்து படம் தயாரித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, இயக்குநர் லிங்குசாமி பிவிபி கேப்பிட்டல் நிறுவனத்திற்கு ரூ.1.03 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததை அடுத்து, லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிவிபி நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

தங்களிடம் பெற்ற ரூ.1.03 கோடி கடனுக்காக காசோலை பணமில்லாமல் திருப்பி வந்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் செக் மோசடியில் ஈடுபட்டதாக லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top