செல்வராகவனின் வளர்ச்சியைப் பார்த்து மெய்சிலிர்த்த தந்தை கஸ்தூரிராஜா.. வறுமையைத் தாங்கி தோள் கொடுத்த தலைமகன்

நடுத்தரக் குடும்பத்திலும், ஏழைக் குடும்பத்திலும் முதல் மகனாக, மகளாகப் பிறக்கும் அனைவருக்குமே மிகப்பெரிய குடும்பப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றனர். தந்தையின் போதாத வருமானம். அடுத்தடுத்து இருக்கும் தம்பி, தங்கைகள் என மொத்த குடும்பத்தையுமே பதின்ம வயதினைத் தாண்டும் போது தோளில் சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குடும்பத்திற்காக தங்கள் ஆசைகளை, வாழ்க்கையைத் தியாகம் செய்கின்றனர். சினிமாத் துறையிலும் இதி விதிவிலக்கல்ல.

இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே தூக்கிக் கொண்டாடும் இயக்குநர் கஸ்தூரிராஜாவின் குடும்பம் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் வறுமையில் உழன்றிருக்கின்றனர். சினிமா வாய்ப்புத் தேடி வந்த கஸ்தூரிராஜா ஆரம்பத்தில் உதவி இயக்குநராகப் பணி புரிந்த போது மிகவும் சொற்ற சம்பளமே கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்து 4 பிள்ளைகளும் பிறக்க சாப்பாட்டிற்கே வழி இல்லாத சூழல் நிலவியிருக்கிறது. வீட்டில் இருந்த பொருட்களை அடமானம் வைத்து வயிற்றை நிரப்பியிருக்கின்றனர்.

இவர்கள் வறுமையைப் பற்றி கஸ்தூரிராஜா பேட்டி ஒன்றில் கூறும் போது, “வீட்டில் சாப்பாட்டிற்கே வழி இல்லாத நிலையில் கையில் இருந்த 25 பைசா செல்வராகவன் வாங்கிச் சென்று அதில் மைதா மாவு வாங்கி வர அதில் அனைவரும் தோசை ஊற்றிச் சாப்பிட்டிருக்கிறோம்.

இந்தப் படமெல்லாம் சரத்குமாருக்கு வந்த வாய்ப்பா..? ஷங்கர் முதல் லிங்குசாமி வரை அறிமுகப்படுத்திய தருணம்..

எனது மனைவியின் பாட்டி இறப்பிற்கு சொந்த ஊர் செல்லும் போது, அவரிடம் ஒரு குண்டுமணி தங்கம் கூட கிடையாது. தி.நகரில் 2 ரூபாய்க்கு கவரிங் கம்மல் வாங்கிப் போட்டு ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். எங்கள் கஷ்டங்களை எல்லாம் உணர்ந்து வளர்ந்தவர் தான் செல்வராகவன். அவருக்கு இயல்பாகவே குடும்பப் பொறுப்பு இருந்தது.

இன்றும் அவரிடம் பல ஆயிரங்களை, லட்சங்களைக் கொடுத்தாலும், ஏன் கோடிகளைக் கொடுத்தாலும் அதை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை செல்வராகவன் நன்கு அறிந்தவர். எனவே குடும்பத்தின் மூத்த மகனாகப் பிறந்த அவர் என்னுடைய கஷ்டங்கள் அனைத்திலும் தோள்கொடுத்தார்.

இன்று சினிமாவில் இப்படி ஒரு உச்சத்தைத் தொடுவார் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. மேலும் தனுஷ் தேசிய விருது வாங்கிய போது அவர்களை அழைத்துச் சென்ற அந்த தருணத்தில்தான் தனது பிள்ளைகளை நினைத்து மிகவும் பெருமை கொண்டேன்.” என்று கஸ்தூரிராஜா இயக்குநர் செல்வராகவனை பற்றி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...