இளையராஜாவுக்காக 13 படங்களை இழந்த இயக்குநர் ஜி.எம்.குமார்.. இவரால் இளையராஜா இழந்த ஒரே படம்..

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜிடம் உதவியாளராகப் பணியாற்றி சினிமா இலக்கணங்களைக் கற்று பின்னர் அறுவடை நாள் திரைப்படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர்தான் இயக்குநர் ஜி.எம்.குமார். இவரது வீட்டருகே தியேட்டர் இருந்ததால் அங்கு திரையிடப்படும் சத்தங்களைக் கேட்டே சினிமாவில் இயக்குநராகும் ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நுழைந்தவர். முதன் முதலில் பிரபு, ராம்குமார், பல்லவி ஆகியோர் நடிப்பில் இயக்குராக அறுவடை நாள் திரைப்படத்தினை இயக்கினார். இத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

அறுவடை நாள் எடுத்து முடித்தபின் அதை சிவாஜியிடம் போட்டுக் காட்டிய போது ஒரு சீன் கூட திருத்தம் சொல்லாமல் அப்படியே ஓகே சொன்னாராம். மேலும் இளையராஜாவின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக விளங்கும் தேவன் கோவில் மூடிய நேரம்.. போன்ற பாடலும், ஓலை குருத்தோலை… சின்னப் பொன்னு சின்னப் பொன்னு.. மேளத்தை மெல்லத்தட்டு.. போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றது. இயக்குநர் ஜி.எம்.குமார் இயக்குநராக அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் இவரை அடுத்த படத்தில் புக் செய்ய கிட்டத்தட்ட 13 தயாரிப்பாளர்கள் அணுகியிருக்கின்றனர்.

அமர்க்களத்தில் அசத்தலான ஓப்பனிங் கொடுத்த ராகவா லாரன்ஸ்.. அஜீத் செய்த அந்த ஒரு உதவி..

ஆனால் தயாரிப்பாளர்களிடத்தில் இவர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். தன்னுடைய படங்களில் இசை இளையராஜாதான் வேண்டும் என்று கூற அத்தனை தயாரிப்பாளர்களும் பின்வாங்கியிருக்கின்றனர். ஏனெனில் அப்போது இளையராஜாவின் மேல் சில தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் இருந்திருக்கின்றனர். இதனால் 13 படங்களின் வாய்ப்பினை இளையராஜாவுக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் ஜி.எம்.குமார்.

இதனை அறிந்த இளையராஜா அவரை ஒருநாள் வரச் சொல்லி நீ எனக்காக 13 படங்களை விட்டுக் கொடுத்திருக்கிறாய். ஆனால் நான் உனக்காக ஒரு படத்தை விட்டுக் கொடுத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் இளையராஜாவிடம் கதை சொல்ல, அதை ஜி.எம்.குமார் இயக்கினால் இசையமைக்கிறேன் என்று ராஜா கூறியிருக்கிறார்.

ஆனால் அந்தத் தயாரிப்பாளருக்கு ஜி.எம்.குமாருடன் மனவருத்தம் இருந்ததால் இளையராஜாவையும் வேண்டாம் என நிராகரித்திருக்கிறார். இதனை இளையராஜா ஜி.எம்.குமாரிடம் கூறியிருக்கிறார். மேலும் ஜி.எம்.குமார் காக்கிச் சட்டை போன்ற படங்களுக்கு கதையும் எழுதியிருக்கிறார். வேதம் புதிது படமும் இவர் இயக்கவேண்டியதே. இப்படி திரைத்துறையில் பல்வேறு பெரிய வாய்ப்புகளை இழந்திருக்கிறார். அதன்பின் இயக்கத்தினை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன்-இவன் படத்தில் ஜமீன் தீர்த்தபதியாகவும், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மூத்த அண்ணனாகவும் நடித்துப் புகழ் பெற்றார். தற்போது மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் ஜி.எம்.குமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...