‘காதல்‘ படத்துல முதல்ல யோசித்த கிளைமேக்ஸ் இதுவா? இயக்குநர் பாலாஜி சக்திவேல் வெளியிட்ட சீக்ரெட்

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருந்தாலும், ‘காதல்‘ என்ற பெயரிலேயே அற்புதமான ஒரு லவ் சப்ஜெக்டைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தான் இயக்குநர் பாலாஜி சக்திவேல். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான பாலாஜி சக்திவேல் தனது குருவான ஷங்கரின் தயாரிப்பிலேயே தனது முதல் படத்தினை இயக்கினார். கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்தில் பரத், சந்தியா, தண்டபாணி, சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

2000 ஆண்டுகளில் காதல் பருவத்தினையும், படிப்பறிவில்லாத ஒரு எழை மெக்கானிக் இளைஞன், மேல்வர்கத்து பெண்ணான சந்தியா மீது காதல் கொண்டு இருவரும் ஊரை விட்டு ஓடி பின்னர் ஹீரோயின் குடும்பத்தினர் அவர்களைக் கண்டுபிடித்து பரத்தை அடித்து விடுகின்றனர்.

அவர் மனநிலை பாதிக்கிறார். இந்நிலையில் ஹீரோயின் சந்தியாவை வேறு ஒருவருக்கு மணம் முடிக்க எதேச்சையாக ஓர் இரவில் பரத்தை பைத்தியமாகப் பார்க்கும்போது சந்தியா கணவர் நடந்ததை உணர்ந்து பரத்தை தன்னுடன் அழைத்துச் செல்வது போல் கதை அமைந்திருக்கும்.

இந்தப் படம் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. படம்  வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் பாடல்கள் மிகப் பிரபலம் ஆனது. இன்றும் பெண்கள் பூப்பெய்தி சடங்கு சுற்றும் போது கிராமப்புறங்களில் காதல் படத்தில் வரும் பாடல் ஒலிபரப்பத் தவறுவதில்லை.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது முதல் படத்திலேயே அழுத்தமான கதையைக் கையில் எடுத்து வெற்றியைக் கொடுத்தார். ‘காதல்‘ படத்தின் கதையானது உண்மைச் சம்பவத்தினைத் தழுவி எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் முரட்டு வில்லனாக காதல் தண்டபாணி நடித்து பெயர் வாங்கியிருப்பார். மேலும் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியானது படத்தில் பார்ப்பது போன்று சோகமான முடிவைக் கொண்டதாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் எழுதவில்லையாம்.

பொருளாதார வல்லுநர்களையே மிரள வைத்த தேவர் பிலிம்ஸ்.. பூஜை முதல் ரிலீஸ் வரை பக்கா பிளானிங்..

அதாவது கிளைமேக்ஸில் கதைப்படி பரத்தை தன்னுடைய காதலியின் குடும்பத்தினர் மண்ணுக்குள் அமுக்கி, அமுக்கி எடுப்பது போன்றும் பின்னர் அவர் மூச்சுத் திணற தன்னுடைய காதலை மனதில் கொண்டு அதை மீறி அவர் எழுந்து வில்லன்களை துவம்சம் செய்து சந்தியாவை அழைத்துச் செல்வது போன்றும் எழுதப்பட்டதாம். ஆனால் அவ்வாறு எடுத்தால் வழக்கமான சினிமா பாணியில் மாறிவிடும் என்பதால் இது போன்றதொரு கிளைமேக்ஸை இயக்குநர் பாலாஜி சக்திவேல் வைத்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews