கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றார்கள் என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் பொதுவாக அரசியல் குறித்த கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்கும் இயக்குனர் பாலா அவர்களும் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் முக ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,
தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம், நன்றிகள்! என்று கூறி திருக்குறள் ஒன்றையும் தனது வாழ்த்துச் செய்தியில் பதிவு செய்துள்ளார்.அந்த திருக்குறள் இதுதான்:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி