ஒரே நாளில் வெளியாகும் இயக்குனர் விஜய்யின் இரண்டு படங்கள்

தயாரிப்பாளர் அழகப்பனின் மகனான இயக்குனர் விஜய் கிரீடம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தலைவா, வனமகன், மதராசப்பட்டினம், தேவி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வருகிறார்.

43230ae21028d6ba0de1f487209c72b8-1
Tamil Director Vijay Images Photos

இரண்டு வருடம் முன் அவர் இயக்கிய தேவி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தேவி படத்தின் இரண்டாம் பாகமாக தேவி 2 மற்றும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு நடிப்பில் வாட்ச்மேன் படத்தை இயக்கி வருகிறார்.

இதில் என்ன அதிசயம் என்றால் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. வருடப்பிறப்பை முன்னிட்டு ஏப்ரல் 12லேயே ரிலீஸ் ஆகிறது.

இது போல அபூர்வங்கள் 80களில் சாதாரணமாக நடப்பது உண்டு. ஒரே நடிகரின் படங்கள், ஒரே இயக்குனரின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது உண்டு .

நீண்ட நாட்கள் கழித்து அப்படியொரு சாதனையை நிகழ்த்த இருக்கிறார் விஜய்.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment