இன்ஜினியரிங் மட்டுமன்றி அனைத்து கல்லூரிகளுக்கும் நேரடி எழுத்துத்தேர்வு! ஆன்லைன் எக்ஸாம் கிடையாது!

நேற்றைய தினம் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை அளித்திருந்தது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வானது நேரடியாக எழுத்துத்தேர்வு என்று கூறியிருந்தது.

ஆன்லைனில் தேர்வு

இதனால் 20 ஆண்டுகளாக அரியர் வைத்த மாணவர்கள், நடப்பாண்டில் படிக்கும் மாணவர்கள் என அனைவரும் கல்லூரிகளுக்கு வந்து தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தது. இதற்காக மாணவர்கள் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து  கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு தான் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை கூறியுள்ளது.

அதன்படி பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்திலும் இனி நேரடித் தேர்வு தான் நடத்தப்படும். ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் போராடி வந்த நிலையில் உயர் கல்வித்துறை செயலாளர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இதனால் மாணவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் பல பகுதிகளில் மாணவர்கள் நடத்திய போராட்டமும் தற்போது வீணாக மாறியதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment