Connect with us

தமிழகத்தில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது!!

News

தமிழகத்தில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது!!

335bc7e30fc71c42d0d5bed7106a7d4c

தற்போது நம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது, மேலும் பல மாதங்களுக்கு பின்பு நம் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வமுடன் சென்று பாடம் படிக்கின்றனர். மேலும் பலரும் நீண்ட நாளுக்குப் பின்பு பள்ளிக்கு சென்றதால் உற்சாகத்தோடு காணப்படுகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை நேரடி வகுப்புகள் பற்றிய சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.3c49afe1d8ac4a07aa06d933be592184

அதன்படி தமிழகத்தில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவினை பிறப்பித்துள்ளது. மாணவர்களுக்கு பள்ளிக்கு நேரடியாக வருமாறு கட்டாயப்படுத்த மாட்டார்கள் என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 வகுப்பு முதல் பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது எனவும் மனுதாரர் கூறியுள்ளார். சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்களை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்கள் தர வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top