திண்டுக்கல்: இரவில் காவலில் இருந்த இளைஞர் சுட்டுக்கொலை! பதுங்கி இருந்த 4 பேர் கைது!!

வன்மமான கொலை சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டே வருகின்றன. குறிப்பாக நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அவை பெரும்பாலும் பொறாமையின் காரணமாகவோ அல்லது போட்டியின் காரணமாக நிலவுகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட இளைஞர் ராகேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கலில் தென் மண்டல ஐ.ஜி அன்பு செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்துள்ளார்.

துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்தது போலீஸ். இளைஞர் ராகேஷை கொன்ற பிரகாஷ், மரிய பிரபு, கணேசமூர்த்தி,  ஜான் சூர்யா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில் போட்டி காரணமாக மீன் குத்தகைதாரர், ராகேஷ்  இரவில் காவலில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கைதான 4 பேரிடம் இருந்து இரண்டு அரிவாள்கள், கொலையாளிகளால் தயாரிக்கப்பட்ட நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment