திண்டுக்கம் மாவட்டம் கன்னிவாடி அருகேயுள்ள துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 2 கோடி டிரான்ஸ்பார்மர்கள் எரிந்து நாசமாயின.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே, ஆலந்தூரான் பட்டி என்ற என்ற இடம் உள்ளது. இங்குள்ள துணை மின் நிலையத்தில் நேற்று டிரான்ஸ்பார்மர் பழுதானது.
நேற்று காலை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் ஆயில் அதிகமாகி அது வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்து அருகே இருந்த ஆத்தூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையிலான பணியாளர்கள் மின்விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
சாதாரணமாக 65 டிகிரி முதல் 75 டிகிரி வரை தான் வெப்பம் இருக்கும். மின்விபத்து, மின்தடை இருக்கும்போதுதான் வெப்பம் அதிகரிக்கும்
இந்த டிரான்ஸ்பார்மரில் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்த காரணத்தால் ஆயில் சீல் வெடித்து ஆயில் வெளியேறியதால் தீப்பிடித்து இது எரிந்துள்ளது. மின்விபத்தால் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள மின் சாதனங்கள் எரிந்து நாசமாகி விட்டன’ என்று அவர் கூறியுள்ளார்