முக்கிய நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு- விசாரணை அதிகாரியையும் கொல்ல முயன்ற மலையாள நடிகர் திலீப்

பிரபல மலையாள நடிகர் திலீப் 2017ம் ஆண்டு வரை மக்களால் போற்றப்படும் நடிகராக இருந்தார். 2017ம் ஆண்டு சிலருடன் சேர்ந்து தமிழ் மலையாளத்தில் முக்கியமான நடிகையாக விளங்கிய ஒருவரை  பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இந்த வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கின்போது திலீப்பின் நண்பர் பாலச்சந்திரகுமார் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், திலீப் அந்த நடிகையை கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நடிகை அலறிய சத்தத்தை ஸ்டுடியோவில் கொடுத்து அதிக சத்தம் வரும்படி ஆடியோ எடிட் செய்து ரசித்து கேட்டதாக கூறி இருக்கிறார்.

மேலும் இந்த வழக்கு பற்றி விசாரித்த  விசாரணை அதிகாரியை  திலீப்பின் குடும்ப உறுப்பினர்களோடுன் சேர்ந்து கொல்ல முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் திலீப் அவரது சகோதரர்  அனூப், மைத்துனர் சூரஜ்,அப்பு, பாபு உள்ளிட்டோர் மீது விசாரணையை சிதைக்கும் நோக்கில் செயல்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment