பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
கடந்த 1922 ஆம் ஆண்டு பிறந்த திலீப்குமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகனாக இருந்தார். அவருக்கு தற்போது 98 வயது ஆகிறது. இன்றைய கான் நடிகர்களுக்கெல்லாம் அவர் தான் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய தேவதாஸ், கங்கா ஜமுனா உள்பட பல திரைப் படங்கள் சூப்பர் ஹிட்டாகின என்பது குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை
98 வயதான திலீப்குமார் தன்னுடைய மும்பை வீட்டில் வசித்து வந்த நிலையில் திடீரென அவருக்கு இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவருடைய உறவினர்கள் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.