இடிந்து விழுந்த பழைய துறைமுகப் பாலம்; மீண்டும் பழையபடி கட்ட நடவடிக்கை!

தற்போது வங்கக் கடல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஏனென்றால் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வருகிறது.

இருந்தாலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.அதோடு மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுவும் குறிப்பாக நாகூர் பட்டினசேரி கிராமத்தில் 500 மீட்டர் கடல் நீர் உள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடல் சீற்றத்தால் பழைய துறைமுகப் பாலம் இடிந்து விழுந்தது. இந்த பழைய துறைமுக பாலத்தை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.

அதன்படி கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த பழைய துறைமுகத்தை பழமை மாறாமல் மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் 60 கோடி மதிப்பில் மேம்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் ஆளுநர் தமிழிசை பேட்டி அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment