டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: எப்படி கணக்கிடுவது தெரியுமா?

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வீடு வீடாக சென்று கணக்கிடப்பட்டு வரும் நிலையில் இனி டிஜிட்டல் முறையில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இதில் ஏராளமான ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்காலிகமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

digital census1இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நித்தியானந்தா ராய், முதல் முறையாக நாட்டில் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த இருப்பதாகவும் இதற்காக செல்பேசி செயலி ஒன்றை அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு வீடுதோறும் சென்று தகவல்களை சேகரித்து வந்த நிலையில் தற்போது மக்கள் தொகை கணக்கு டிஜிட்டல் முறையில் செயலி வழியாகவும் ஒரு சில இடங்களில் மட்டும் நேரடியாகவும் சில பகுதிகளில் இணையதளங்கள் வழியாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தாங்களே முன்வந்து இந்த தகவல்களை அளிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக இயக்குனர்களை மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிடவில்லை என்றும் ஒரு சில மாநிலங்களில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் மட்டும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.