43 வயதிலும் நச்சுன்னு இருக்கும் மஞ்சு வாரியர்… இளமைக்கு காரணமான 6 ரகசியங்கள் என்ன தெரியுமா?
மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் மஞ்சு வாரியரை கொண்டாடி வருகின்றனர். அசுரன் படம் மூலம் தமிழில் கால் பதித்த மஞ்சு வாரியர், தனது நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டார். தற்போது 43 வயதானாலும் ஹீரோயினாக கலக்கி வருகிறார். இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மஞ்சு வாரியர் இளமை மற்றும் பொலிவுடன் இருப்பதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது.
1. மஞ்சு வாரியர் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதில் அதிகம் கவனம் செலுத்துவாராம். சீசனின் போது கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்வாராம்.
2. கட்டாயம் வீட்டு சாப்பாட்டை மட்டுமே விரும்பு சாப்பிடுவாராம். ஓட்டல் மற்றும் ஆயிலில் செய்யப்பட்ட உணவு பொருட்களை அருகில் கூட சேர்க்கமாட்டாராம்.
3. சினிமா பிரபலங்கள் பலரையும் போலவே மஞ்சு வாரியரும் எப்போதும் இளமையுடன் ஜொலிப்பதற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கவும் நொறுக்குத்தீனி வகைகள் மற்றும் இனிப்புகளை சேர்த்துக்கொள்வது கிடையாது.
4. அம்மாவைப் போலவே மஞ்சு வாரியரும் பயிற்சி பெற்ற கதக்கலி நடனக்கலைஞர், எனவே உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க கதக்கலி நடனமாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
5. ஆரோக்கியமான வாழ்விற்கு நடனத்திற்கு அடுத்த படியாக மஞ்சு வாரியர் அதிகம் செய்வது யோகா. மன அமைதி மற்றும் உடல் நலத்திற்காக யோகா செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
6. மஞ்சு வாரியருக்கு ஜிம்மிற்கு செல்வது என்பது அவ்வளவு பிடித்தமானது கிடையாது. ஆனால் தினமும் காலையில் ஒருமணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
