சதமடித்த டீசல்..! விழிபிதுங்கி போன மக்கள்!! இப்ப என்ன பண்றது? சென்னையிலேயே இவ்வளவா!!
நாளுக்கு நாள் நம் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக 15 நாட்களாக நம் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த விலை உயர்வு இன்று தினமும் காணப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு நாளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயை தாண்டியது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 110.08 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் டீசல் விலையும் அதிகரித்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 76 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் டீசல் சென்னையில் 100 ரூபாயை தாண்டி அங்கு 100.18க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 15 நாட்களில் 13 முறையாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் டீசல் விலை 100 ரூபாயையும் பெட்ரோல் விலை 110 ரூபாயும் தாண்டியது அனைவருக்கும் பெரும் சிக்கலையும் கஷ்டத்தையும் கொடுத்துள்ளது.
