எகிறும் பெட்ரோல் டீசல் விலை: பேரதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் !!
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.
ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா கடந்த மாத காலமாக உக்ரைன் மீது குண்டு மழை பெய்தது. இதன் எதிரொலியாக இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலையினை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல், டீசலின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் பெட்ரோல், டீசலின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
அதன்படி, இன்று பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ. 110.09 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசு அதிகரித்து ரூ. 100. 18 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், கடந்த 15 நாட்களில் 13 வது முறையாக பெட்ரோல் ரூ. 7.56, டீசல். 7. 61 ஆக அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் கவலை அடைந்துள்ளன. இதனை குறைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
