ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் இல்ல, மொத்தம் 24 நாட்களாக சதமடிக்கும் டீசல் விலை…!!

மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து திடீரென்று நம் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை முன்பு போல உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். அதுவும் குறிப்பாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நூற்றி பத்து ரூபாயை தாண்டி விற்பனையானது இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் கஷ்டத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த இருபத்தி நான்கு நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

அதன்படி சென்னையில் 24 நாட்களாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 110.85 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 100.94 மட்டுமே விற்பனை செய்யபட்டு வருகிறது.

இருப்பினும் டீசல் விலை நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை ஆவது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment