லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் உயிரிழப்பு – 2 ஓட்டுநர்கள் கைது!!

சென்னை மதுரவாயல் சாலையில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவத்தில் 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போரூர் பகுதியில் வசித்து வருபவர் 20 வயதான ஷோபனா. இவர் கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் தன்னுடைய தம்பி அரிஷை பள்ளிக்கு அழைத்து சென்றார்.

உடல் எடையை குறைக்க மருந்து: இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

அப்போது தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் அருகே வாகனம் சென்று கொண்டிருந்த போது வேன் ஒன்று இருசக்கர வாகனத்தை முந்திசெல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது மொபெட் மீது உரசியதில் 2 பேரும் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்துள்ளனர். இந்த சூழலில் மணம் ஏற்றி வந்த லாரி ஒன்று ஷோபனா மீது ஏறி இறங்கியது. அதில் தம்மி கண்முன்னே ஷோபனா உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை ஆவினில் முறைகேடு – 47 பேர் நீக்கம்!!

அதே சமயம் லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுனரை வலைவீசி தேடி வந்தனர். தற்போது விபத்து தொடர்பாக 2 ஓட்டுநர்கள் போலீசார் கைதுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.