Connect with us

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரமுடியாது..!! அனைத்து மனுக்களும் தள்ளுபடி;

aadal paadal

தமிழகம்

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரமுடியாது..!! அனைத்து மனுக்களும் தள்ளுபடி;

சமீபகாலமாக உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்து கொண்டே இருக்கிறது. இதில் நாள்தோறும் நீதிபதிகள் புதுப்புது அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளை பிறப்பித்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினம் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கோவில்களில் ஆடல், பாடல் நடத்த அனுமதி மறுத்துள்ளார். கோவில்களில் ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஆடல், பாடல் நடத்த அனுமதி கோரி மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருவிழாக்கள் வழக்கம்போல் நடைபெறலாம் ஆனால் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது என்று நீதிபதி தாரணி கூறினார்.

ஆடல், பாடல் நடத்த அனுமதி கோரிய மனுக்களை திரும்ப வாங்கிக் கொள்ள அவகாசம் அளித்தார் நீதிபதி தாரணி, திரும்ப பெறப்படாத மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி தாரணி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top