தோழி இறந்தது இப்போதுதான் தெரியுமா? யாஷிகாவின் உருக்கமான பதிவு!

59d83a695133120be4f428f6ea63250d-1

சமீபத்தில் நடிகை யாஷிகா சென்ற கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது என்பதும் யாஷிகாவின் உயிர் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தனது தோழி பவானி இறந்தது கூட தெரியாமல் சிகிச்சை பெற்றுவந்த யாஷிகாவுக்கு தற்போதுதான் அவரது மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவு செய்துள்ளார் 

அதில் எனது தோழியை பவானி இறந்ததை எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்றும், இந்த விபத்தில் என்னை இறைவன் காப்பாற்றி விட்டார் என்பதற்காக அவருக்கு நன்றி சொல்வதா? அல்லது எனது தோழியை எடுத்துக்கொண்டு சென்று விட்டாரே என்று அவரை திட்டுவதா? என்பது கூட எனக்கு தெரியவில்லை 

ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்நாள் முழுவதும் நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது. உன்னுடைய இறப்புக்கு நானே காரணம் ஆவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. உன்னுடைய ஆத்மா சாந்தி அடையும் என்று நான் நம்புகிறேன். உன்னுடைய பெற்றோர்களுக்கு நான் மிகப்பெரிய வேதனையை கொடுத்து விட்டேன்

நீ என்னை மன்னிக்க மாட்டான் என்று தெரியும். உனது குடும்பத்தையும் மோசமான ஒரு நிலைக்கு தள்ளயதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். நீ என்னிடம் மீண்டும் வர கடவுளை வேண்டுகிறேன். உன் குடும்பம் என்னை ஒருநாள் மன்னிக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். யாஷிகாவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.