News
மதுரையில் இருந்து சென்னை வந்தாரா?-“மணிகண்டன்”-வேறு எங்கும் சென்றாரா?
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். காரணம் என்னவெனில் இவர் மீது நாடோடிகள் படத்தின் துணை நடிகையான சாந்தினி வழக்கு தொடுத்திருந்தார். மேலும் அவர் என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி விட்டார் என்றும் என்னை கொலை மிரட்டல் செய்தஆகும் அவர் காவல் நிலையத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி அவர் அப்படி பண்ணவில்லை நடிகை பொய் சொல்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் பற்றி விசாரணை செய்ய தனிப்படை போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். மேலும் அங்கு மணிகண்டன் குறித்த ஆதாரங்களை திரட்ட பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரையிலிருந்து மணிகண்டன் சென்னை வந்தாரா? என்றும் வேறு எங்கேனும் சென்றாரா? என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக மணிகண்டன் குடும்பத்தோடு சேர்த்து மதுரையில் இருந்துள்ளார். அதன் பின்னர் அவரது குடும்பத்தினர் மட்டும் ராமநாதபுரம் திரும்பி நிலையில் மணிகண்டன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இதனால் அவர் மணிகண்டன் மதுரையில் இருந்து சென்னை வந்தாரா என்று வேறு எங்கும் சென்றாரா என்றும் விசாரிக்கப்படுகிறது. மேலும் அவர் அடிக்கடி ராமேஸ்வரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருப்பார் என்றும் அங்கு அங்கு சென்று விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் உள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் மீது விசாரணை செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
