Connect with us

நேர்காணலில் கலந்து கொண்டாலும் உதயநிதி போட்டியில்லையா?

News

நேர்காணலில் கலந்து கொண்டாலும் உதயநிதி போட்டியில்லையா?

7896cb1d93a92343d0d8a73c3811f831

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக நேர்காணல் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இன்று நடைபெற்ற நேர்காணலில் முக ஸ்டாலின், உதயநிதி உள்பட விருப்பமனு கொடுத்த அனைவரும் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்துள்ளார் என்பதும் அவரை தவிர வேறு யாரும் அந்த தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஆனால் அதே நேரத்தில் விருப்பமனு கொடுத்து நேர்காணலில் கலந்து கொண்டாலும் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி இல்லை என்று கூறப்படுகிறது. வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் திமுக வேட்பாளர் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இருக்காது என்றும் அவருக்கு பதிலாக சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக பகுதி செயலாளர் மதன் மோகன் என்பவர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

09802ff856d0b1c0ff963c65d4a2ff1c

பாஜக சார்பில் அங்கு நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பிரபலங்கள் வரவிருப்பதாகவும் எனவே அந்த தொகுதியில் போட்டியிடுவது ரிஸ்க் என்றும் என்பதால் உதயநிதி பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் திமுக வேட்பாளர் பட்டியல் வந்த பிறகுதான் இந்த தகவல் உறுதி செய்யப்படும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top