Connect with us

மதுரையை சிங்கப்பூராக மாற்றினார்களா? அவர்களுக்கு அமாவாசை அரசியல் தான் தெரியும்: ஸ்டாலின்

ஸ்டாலின்

தமிழகம்

மதுரையை சிங்கப்பூராக மாற்றினார்களா? அவர்களுக்கு அமாவாசை அரசியல் தான் தெரியும்: ஸ்டாலின்

மதுரையை சிங்கப்பூராக மாற்றினார்களா? அவர்களுக்கு அமாவாசை அரசியல் தான் தெரியும்: ஸ்டாலின்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி உள்ளதால் அனைவரும் தேர்தல் பரப்புரையில் மும்முரத்தைக் காட்டிக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

அவர் இன்று மதுரை மாவட்டத்தில் காணொளி மூலமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் மேலூரில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார். மதுரையை லண்டன், சிங்கப்பூராக மாற்றுவோம் என்றார்கள். ஆனால் மதுரையைச் சிதைத்து வைத்துள்ளார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னையை போல் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்தும் விசாரிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அதேபோல் அரசியல் அம்மாவாசை யார் என்று தெரிந்துதான் மக்கள் தற்போது அதிமுகவினரை புலம்ப வைத்து உள்ளார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதிமுகவினருக்கு ஆக்கபூர்வ அரசியல் தெரியாது, அவர்களுக்கு அம்மாவாசை அரசியல் தான் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கற்பனையில் கோட்டை கட்டி விட்டு பாஜகவுக்கு டப்பிங் செய்து பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். மிசாவை பார்த்த என்னை மிரட்ட முடியுமா என எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு கேள்வி கேட்டுள்ளார். இபிஎஸ்-இன் பொறுப்பற்ற ஆணவப் பேச்சுக்கு இந்த நகர்ப்புற தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top