Connect with us

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க விரும்பவில்லை: விளாடிமிர் புதின் திட்டவட்டம்

புதின்

செய்திகள்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க விரும்பவில்லை: விளாடிமிர் புதின் திட்டவட்டம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க விரும்பவில்லை: விளாடிமிர் புதின் திட்டவட்டம்

போர் நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி இருந்த நிலையில் அவரை சந்திக்க விரும்பவில்லை என்று ரஷ்ய அதிபர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் தீவிர முயற்சி மேற்கொண்டு இருக்கிறார். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பேசிய போது இஸ்ரேலில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச தயார் என கூறினார்.

ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு விடப்பட்ட அழைப்புகளை புதின் நிராகரித்து விட்ட நிலையில் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்பாரா என்ற வினா எழுந்தது.

இந்நிலையில் உக்ரைன் அதிபரை சந்திக்க விருப்பமில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப்பியிடம் தொலைபேசியில் பேசிய போது புதின் அவ்வாறு பேசியதாக கூறுகின்றனர். இருப்பினும் ரஷ்யா – உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற இருப்பதாக உக்ரைன் அதிபர் தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top