மணி பார்க்கவில்லை கோழி கூவியது வியாபாரத்துக்கு வந்தேன்!! நள்ளிரவு 12 மணிக்கு வியாபாரம் செய்த விவசாயி…!
பொதுவாக நாம் சிறு வயதில் இருக்கும் போது சாயங்காலம் தூங்கினால் மறுநாள் விடிந்து விட்டதோ என்று குழப்பத்தில் எழுந்து பார்ப்போம். ஆனால் தற்போது விவசாயி ஒருவர் இவ்வாறு செய்துள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
நள்ளிரவு என்று தெரியாமல் அதிகாலை என்று நினைத்து வியாபாரம் செய்துள்ளார். அதன்படி திருப்பத்தூர் அண்ணா அண்ணா சிலை அருகே விற்பனை செய்துள்ளார். அதன்படி சிவகங்கை மாவட்டம் வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள வைரம் என்ற வயதான விவசாயி தனது தோட்டத்தில் உள்ள காய்கறிகள் கீரைகளை திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே எப்போதும் விற்பது வழக்கம்.
அவர் அதிகாலை என்று நினைத்து நள்ளிரவு 12 மணிக்கு வியாபாரம் செய்துள்ளார். அதனை கண்ட அங்குள்ள மக்கள் அவரிடம் கேள்வி கேட்டனர். அவரது நிலைமையை அறிந்து அவரிடமும் 12 மணி அளவிலும் காய்கறிகள், கீரைகளை பொதுமக்கள் சிலர் வாங்கினர்.
அப்போது அவரிடம் கேட்டபோது மணி பார்க்கவில்லை கோழி கூவியது நான் எழுந்து வந்தேன் என்று அவர் நிகழ்ச்சியாக கூறினார். இதனை அறிந்த போலீசார் உடனே வந்து அவரது நிலைமையை புரிந்து காலையில் வந்து வியாபாரம் செய்யுமாறு அவரை அனுப்பிவைத்தனர்.
