பள்ளியிலேயே மாணவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த டைரி!!: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போக்சோ சட்டத்தின்படி பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சட்டம் பற்றி தெரியாமல் பலரும் குற்ற செயலில் ஈடுபடுவது தெரிகிறது.

இதனால் மாணவர்கள் பள்ளியிலேயே இது குறித்து விழிப்புடன் அறிந்து கொள்ளும் வகையில் கல்வித் துறை தற்போது தரமான அறிவிப்பு ஒன்றினை கூறியுள்ளது. அதன்படி போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களுக்கு கையேடு வழங்க உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க ஜெர்மன், ஜப்பான், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட மொழிகள் கற்று கொடுப்பது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து பள்ளி நூலகங்களிலும் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள தனி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டி அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment