இத்தனை வைர கற்களா,…. கின்னஸ் சாதனை படைத்த மோதிரம்!

பொதுவாக பெண்களுக்கு நகைகள் என்றாலே ரொம்ப பிடிக்கும். அதிலும் வைர நகைகள் என்றால் அதன் மதிப்பும் மவுசும் இன்னும் அதிகம் தான். நடுத்தர மக்களுக்கு எப்பவும் தங்கம், வைரம் என்பது கனவாகவே உள்ளது.

அந்த அளவிற்கு தங்கம் மற்றும் வைரத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. ஆனாலும் அதன் மதிப்புக்கு ஏற்ப அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

இந்நிலையில் அப்படிப்பட்ட விலையுயர்ந்த வைரத்தை வைத்து புதிய சாதனை படைத்திருக்கின்றனர். மும்பையை சேர்ந்த அரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட் மற்றும் எச் கே டிசைன்ஸ் இவர்கள் தயாரித்து உள்ள ஒரு வைர மோதிரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வைர கற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதுவே உலகில் அதிக வைரக் கற்கள் உடைய மோதிரம் ஆகும். இதற்கு கின்னஸ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தில் சரியாக 50 ஆயிரம் 97 வைரக் கற்கள் இந்த மோதிரத்தில் உள்ளன. இதை தவிர இந்த மோதிரத்தில் இன்னும் ஒரு சிறப்பு உள்ளது.

இந்த மோதிரத்தை தயாரிக்க இவர்கள் பயன்படுத்திய தங்கம் வாடிக்கையாளர்கள் முன்னர் கடைகளில் விற்ற தங்கத்திலிருந்து மறுசுழற்சி செய்யப்பட்டவை என்பது இதன் சிறப்பாகும். அதேபோல வைரங்களுமே வாடிக்கையாளர்கள் விற்று நகைகளிலிருந்து மீட்கப்பட்டவை என கின்னஸ் சாதனை தளம் கூறி உள்ளது.

சூரியகாந்தி மலர் மேல் பட்டாம்பூச்சி அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மோதிரத்தில் மொத்தம் எட்டு பாகங்கள் உள்ளன. இதில் நான்கு அடுக்குகளுக்கு இதழ்கள் ஒரு தண்டு இரண்டு வைர டிஸ்குகள் மற்றும் பட்டாம்பூச்சி என மொத்தம் 5000097 வைரக் கற்கள் ஒவ்வொன்றும் நிபுணர்கள் தங்கள் கைகளால் வடிவமைக்கப்படடவை.

தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம் …பீதியில் மக்கள் – பார்சலில் வந்த மண்டை ஓடு !

இந்த மோதிரத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூபாய் 6.402 கோடி. இந்த மோதிரத்தில் தயாரிக்க மொத்தம் ஒன்பது மாதங்கள் ஆகியுள்ளது. இதில் சிஐடி எனப்படும் கணினி உதவிய வடிவமைப்புக்கு மட்டுமே நான்கு மாதங்கள் ஆகி உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 18 கேரட் தங்கம் லாஸ்ட் வீக் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இதழ்கள் மற்றும் பட்டாம்பூச்சி இறக்கைகளில் ரோடியம் பூசப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.