Connect with us

அதிர்ச்சி, அதிர்ச்சி.!! இந்திய குழந்தைகளிடம் மட்டுமே நீரிழிவு நோய் அதிகம்!!!

diabetic prick reader ew 133p

செய்திகள்

அதிர்ச்சி, அதிர்ச்சி.!! இந்திய குழந்தைகளிடம் மட்டுமே நீரிழிவு நோய் அதிகம்!!!

முன்பெல்லாம் சர்க்கரை நோய் என்பது அரிதான ஒரு நோயாக காணப்பட்டது. ஏனென்றால் இது ஊருக்கு ஒரு ஆளுக்கு என்ற வீதத்தில் தான் காணப்படும். அந்த அளவிற்கு உடல் உழைப்பும், நோயற்ற வாழ்வும், இயற்கையான உணவு பழக்கமும் காணப்பட்டது.

ஆனால் தற்போது பிறக்கும் குழந்தைக்கு கூட சர்க்கரை நோய் தோன்றும் நிலைமையில் நாம் வாழ்கின்றோம். அதிலும் குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தை களின் மத்தியில் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகின்ற நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது.

இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 96 ஆயிரத்து 600 பேர் டைப் 1 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் 15 ஆயிரத்து 900 குழந்தைகள் கூடுதலாக டைப் 1 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில். நோயை கட்டுப்படுத்துவதற்கு பின்பற்ற வேண்டிய உணவு பழக்கவழக்கம், கட்டுப்படுத்தாமல் போனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விவரங்களை ஐசிஎம்ஆர்  இணையத்தில் இடம் பெற்றுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top